மாணவிகளை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்

ேவலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் தீபலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுப்பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் கம்மவார்பாளையத்தை சேர்ந்த 4 மாணவிகளின் தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்காயங்கள் ஏற்பட்டு அந்த பகுதி வீக்கம் அடைந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை நடத்தி ஆசிரியை தீபலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு