ஓடும் பஸ்சில் ஏறிய மாணவர்கள் அடாவடி

வேலூர்: ஒடுகத்தூர் அடுத்த அகரம் நான்குமுனை சந்திப்பு சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டும், ஓடும் பஸ்சில் ஏறி சாகசம் செய்வதும் என நாள்தோறும் அடாவடித்தனம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் மாலை 3 மணி அளவில் கல்லூரி முடிந்து மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் ஏறினர். ஆனால், பஸ்சில் இடம் இருந்தும் சில மாணவர்கள் ஏறாமல் கீழே நின்றனர்.

பின்னர், பஸ் புறப்படும்போது அவர்கள் ஓடி வந்து ஏறி ஆபத்தான முறையில் படியில் நின்றபடி பயணம் செய்தனர். இதனை கவனித்த டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை நிறுத்தி விட்டு மாணவர்களிடம் உள்ளே ஏறும்படி கூறினர். ஆனால், மாணவர்கள் ‘நாங்கள் நிக்குற பஸ்சில எல்லாம் ஏற மாட்டோம், ஓடுற பஸ்சிலதான் ஏறுவோம்’ என்று கூறி அட்டகாசம் செய்தனர். இதனால், 1 மணி நேரம் வரை பஸ்சை எடுக்காமல் நடுவழியிலேயே நிறுத்தி இருந்ததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் மாணவர்கள் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர். அதன் பின்னர் தான்பஸ் இயக்கப்பட்டது.

Related posts

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

வண்டலூர் தானியங்கி மழைமானி நிலையத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு