எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் கடற்படையினராலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஒன்றிய அரசு ஊழிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வரும் பலமுறை வலியுறுத்தி கடிதங்களை எழுதி வருகிறார். இந்த சூழலில், தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். 3 விசைப்படகுகளுடன் 37 மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கைது செய்தது. கைதான 37 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மீனவர்களிடை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தியுள்ளது.

Related posts

மதுரை மண்டலத்திற்கு தேவையான அறிவியல் பரிசோதனை நிபுணர்களை உடனே நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி