சாப்பிட மறுத்த தாயை அடித்துக் கொன்ற மகன்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்த தாயின் தலையில் கண்ணாடி கிளாசால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் போலீசிடம் கூறி உள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செறுதோணி மணியாரன்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்மா (80). அவரது மகன் சஜீவ் (36). தங்கம்மாவின் கணவர் இறந்து விட்டார். கட்டிடத் தொழில் செய்து வரும் சஜீவுக்கு திருமணம் ஆகவில்லை. தாய், மகன் 2 ேபரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தங்கம்மாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு பக்கவாத நோய் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் படுத்த படுக்கையானார்.

சஜீவ் தான் அவருக்குத் தேவையான பணிவிடைகளை செய்து வந்தார். இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு இரவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சஜீவ், தாய்க்கு சாப்பாடு கொடுத்தார்.
ஆனால் அதை அவர் சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே குடிபோதையில் இருந்த சஜீவுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. உடனே கையில் இருந்த கண்ணாடி கிளாசால் தாயின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். அப்போது கீழே விழுந்த தங்கம்மாவின் தலையை பிடித்து கட்டிலில் மோதினார். இதில் படுகாயமடைந்த தங்கம்மாவை சஜீவும், பக்கத்து வீட்டினரும் சேர்ந்து இடுக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாக சஜீவ் மருத்துவமனையில் கூறியுள்ளார்.

இதற்கிடையே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தங்கம்மா இறந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தலையில் கண்ணாடி கிளாசால் ஏற்பட்ட காயம் தான் மரணத்திற்கு காரணம் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சஜீவிடம் விசாரித்தனர். அப்போது தாயை தாக்கியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சஜீவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்