நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு அவை கூடியபோதும் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 29ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, 2வது அமர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி இன்று(ஏப்ரல் 6) வரை நடைபெற்றது. இன்று கடைசி நாள் என்ற அடிப்படையில் காலை மக்களவை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதன் மூலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. முதல் பாகத்தில் பொது பட்ஜெட் மீதான விவாதமும், குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதம் ஆகியவை ஆக்கபூர்வமாக நடைபெற்றிருந்தாலும், 2ம் அமர்வை பொறுத்தவரை அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மேற்கொண்ட அமளியால் 2ம் அமர்வு முடங்க கூடிய சூழல் ஏற்பட்டது.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு