அடுத்தடுத்த தேர்தல்கள் வரும் 24ல் காங்கிரஸ் ஆலோசனை

புதுடெல்லி: கர்நாடகா வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள காங்கிரஸ் அடுத்த சுற்று சட்டமன்றத் தேர்தல்களுக்கு தயாராகி வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் உத்திகளை வகுத்து வெற்றி பெற காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை மறுநாள் ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா, மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தேர்தல் உத்திகள் குறித்து பேச இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பயனால் கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதே போல் ம.பி., தெலங்கானா, ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரையினால் உற்சாகமடைந்துள்ள தொண்டர்கள் காங்கிரஸ் வெற்றி பெற முனைப்புடன் செயலில் இறங்குவது காங்கிசுக்கு பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தானில் கெலாட்-பைலட், சட்டீஸ்கரில் பூபேஷ்-சிங் டியோ, தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி-மாநிலத் தலைவர்கள் இடையேயான உள்கட்சி பூசல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் சவால் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது