தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 170 அதிகாரிகள்

பணி: Administrative Officers (Generalist/Specialist):
i) Accounts: 50 இடங்கள் (பொது-21, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-4, பொருளாதார பிற்பட்டோர்-5). தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து சிஏ/ ஐசிடபிள்யூஏ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எம்பிஏ (நிதி) அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.

ii) Generalist: 120 இடங்கள் (பொது-50, ஒபிசி-32, எஸ்சி-18, எஸ்டி-8, பொருளாதார பிற்பட்டோர்-12). தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் குறைந்தது 55% மதிப்பெண்களும், இதர பிரிவினர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.50,925- 96,765.

கட்டணம்: பொது, ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு முதல் நிலை தேர்வு (Preliminary), பிரதான தேர்வு (Main) என இரு கட்டங்களாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் முதல் நிலை தேர்வு அக்.13ம் தேதி சென்னை, வேலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மையங்களில் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவ.17ம் தேதி பிரதான தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

www.newindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.09.2024.

Related posts

மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

உதகையில் இரண்டாவது சீசன்: அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி