டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

டி20 உலகக் கோப்பை: அரையிறுதி போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57, சூர்யகுமார் 47, ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர்கள் அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது.

Related posts

‘கல்கி’ படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது: படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து..!!

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளில் ஆரம்பமே சரியில்லை.. புகார்களை அடுக்கிய சோனியா காந்தி!!