ரூ5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கயிறால் கட்டி கிணற்றில் தள்ளிய கணவன்: மத்திய பிரதேசத்தில் கொடூரம்


நீமுச்: மனைவியிடம் ரூ5 லட்சம் வரதட்சணை கேட்டு அவரை கயிறால் கட்டி கிணற்றில் தள்ளிய கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் கிர் என்பவர், தனது மனைவி உஷாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் கணவன் – மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தனது மனைவியை கட்டிபோட்டு கிணற்றில் தள்ளிவிட்டார். கயிற்றின் ஒருபகுதியை கிணற்றின் மேல் பகுதியில் இருந்த மரத்தில் கட்டிவிட்டார். கிணற்றுக்குள் இருந்த அவரது மனைவி, உயிருக்கு பயந்து கூச்சலிட்டார். அதனை வீடியோவாக எடுத்து, அவரது மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக கிராமத்திற்கு வந்தனர். மேலும் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலரைத் தொடர்பு கொண்டு, தங்களது மகளைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இவ்விகாரம் போலீசுக்கு சென்றதால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் இருந்த உஷாவை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட ராகேஷ் கிர், தனது மனைவியிடம் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி உள்ளார். ஒருகட்டத்தில் அவரை கயிறால் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். போலீசுக்கு தகவல் கிடைத்த பின்னர், கிணற்றுக்குள் இருந்த உஷாவை மீட்டோம்’ என்றனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு