மாநில காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கர்நாடக சட்டப்பேரவை இன்று தொடங்குகிறது

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி பிடித்தது. கடந்த மே 20ம் தேதி முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனிடையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 3 முதல் 14ம் தேதி வரை நடத்த முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

அதன்படி மாநில காங்கிரஸ் அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 11 மணிக்கு பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து வரும் 7ம் தேதி நடப்பு 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பை கூடுதலாக வகித்து வரும் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 14வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாட்கள் தவிர்த்து பத்து நாட்கள் நடக்கும் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது