தொடர் மழை காரணமாக போளிவாக்கம் தரைப்பாலம் மூழ்கியது: வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருவள்ளூர் – ஸ்ரீ பெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதனால் திருவள்ளூர் – ஸ்ரீ பெரும்புதூர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள் தோறும் இந்த பாதையை கடந்து செல்கின்றன. அதேபோல் தொழிற்சாலைகளில் இருந்து கனரக வாகனங்களும் அதிக அளவில் இவ்வழியாக செல்கின்றன.

மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சாலையின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த தரைப்பாலம் மூழ்கி விடுவதால் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைந்து உயர்மட்ட பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன போட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 28 பேரை காணவில்லை

கனமழை காரணமாக நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் தண்ணீர் கசிந்ததால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி ராமேஸ்வரம் மீனவரின் படகு மூழ்கடிப்பு… படகில் இருந்த மீனவர்கள் 4 பேர் மாயம்.