மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே நேற்று காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது என என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது.

4 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது. ஒடிசாவின் பாரதீப்பிற்கு 690 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தில் இருந்து 740 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்