கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் முடியும்: ரூ230 கோடியில் பிரமாண்டமாக எழும் கட்டிடம்

சென்னை: 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வரும் கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவடை
யும் என பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ரூ.230 கோடி மதிப்பீட்டில் 4.89 ஏக்கர் பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன், 1000 படுக்கைகளுடன் கிங் நிறுவன வளாகத்தில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தனர். இதுவரை தரைத்தளத்தில் 75 சதவீதப் பணிகள் நிறைவுற்றுள்ளதையும், தரை அமைக்கும் பணிகள், அவசர அறுவைச் சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட்டு வரும் பணிகள், ஜன்னல் கம்பிகள் பொருத்தும் பணிகள், மருத்துவ வாயு குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருவதையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இப்பணிகள் அனைத்தையும் குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது