கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.!

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில், தற்போது 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 43 பேர் கொண்ட மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 224 தொகுதிகளில் இதுவரை 209 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பாஜகவில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்த லட்சுமண் சவடிக்கு அதானி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் உள்ள கோலார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கோத்தூர் ஜி.மஞ்சுநாத் போட்டியிடுகிறார்.

Related posts

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி

மாஞ்சோலை சுற்றுலாத் தலத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை