கீழே கிடந்த மணிபர்சை ஒப்படைத்த சிறுவன்: போலீசார் பாராட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி புதுநகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஷக்கீரியா. இவரது மகன் முகமது பைசல். 14 வயதான சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலை முகமது பைசல் பள்ளிக்குச் சென்றபோது, வழியில் கீழே மணி பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது சுமார் 300 ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்கள் இருந்துள்ளன.

அதை முகமது பைசல், எம்கேபி நகர் காவல் நிலையம் சென்ற போலீசார் சரிபார்த்தபோது அதில் கடலூர் முகவரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் சொல்லி இதுகுறித்து விசாரிக்க கூறியுள்ளனர். சம்பந்தப்பட்டவர் வரும் பட்சத்தில் அவரிடம் மணி பர்சை ஒப்படைக்க உள்ளனர். எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் சிறுவன் முகமது பைசலின் நேர்மையைப் பாராட்டி அவனுக்கு வெகுமதி அளித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்