ரயிலில் ஏசி வேலை செய்யாததால் பயணிகளுக்கு வாந்தி மயக்கம்: அபாய சங்கிலியை இழுத்து போராட்டம்

அறந்தாங்கி: ஏசி இயங்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு அதிவிரைவு ரயில் வாரத்திற்கு 3 நாள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் மாலை 4.15க்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டது. ரயில் புறப்படும்போதே முதல்வகுப்பு எம்-5 என்ற பெட்டியில் ஏசி இயங்கவில்லை. இது குறித்து அந்த பெட்டியில் இருந்த 70 பயணிகளும் ரயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் அடுத்த ரயில் நிலையத்தில் சரி செய்யப்படும் என கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஏசி சரி செய்யப்படாமலே அடுத்தடுத்த ரயில் நிலையங்களை கடந்தது. இதனால் பயணிகள் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இரவு 9.58 மணிக்கு அறந்தாங்கிக்கு வரவேண்டிய ரயில் இரவு 10.30 மணிக்கு வந்தது. அங்கேயும் ஏசியை சரி செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். அங்கு வந்த அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அதிகாரிகள். திருவாரூர் ரயில் நிலையத்தில் கண்டிப்பாக ஏசி சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறிச் சென்றனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்