சென்னை: ரூ.732 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.502.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இன்று முதல்வர் திறந்து வைக்கிறார்.