சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: உலகில் முதன்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிற அனைத்து தமிழர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்கள் பெருமை கொள்ளும்விதமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் மூலமாக, பன்னெடுங்கால பழமைவாய்ந்த தமிழர் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்கப்பூரில் அமைய இருக்கிற கலாச்சார மையம், உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும்.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை