தன்கருக்கு கபில் சிபல் பதில்: பிரதமர் விளக்கம் தர மறுப்பதாலே அமளி

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க மறுப்பதால்தான் அமளியே நடக்கிறது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு மாநிலங்களவை மூத்த எம்பி கபில் சிபல் பதிலளித்துள்ளார். மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் டெல்லி ஜமியா மிலியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில், ‘‘ஜனநாயகம் என்பது பொது நலனை பாதுகாப்பதற்காக விவாதம், ஆலோசனை, பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியது. ஜனநாயக கோயிலை களங்கப்படுத்தும் வழிமுறையாக அமளியும், இடையூறும் ஆயுதமாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதில் வேதனை அடைகிறேன்’’ என்றார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள மாநிலங்களவை மூத்த எம்பி கபில் சிபல், ‘‘ஜனநாயக கோயிலை களங்கப்படுத்த அமளியும், இடையூறும் ஆயுதமாக ஏந்தப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி கூறி உள்ளார். அதே கோயிலில்தான் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க மறுக்கிறார். அதனால்தான் ஜனநாயகக் கோயிலில் இடையூறுகள் அமளிகள் ஏற்பட்டுள்ளன’’ என கூறி உள்ளார்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு