கிண்டலடித்த தன்கர் டென்ஷனான கார்கே: வெடித்தது வார்த்தை போர்

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்ட அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், சரிபார்க்கப்படாத தகவல்களை கூற வேண்டாம் என்றார். அதற்கு காங்கிரஸ் மூத்த எம்பி ஜெய்ராம் ரமேஷ், அவை அங்கீகரிக்கப்பட்ட உண்மை தகவல்கள் என்றார். இதைக் கேட்ட தன்கர் கிண்டலாக, ‘‘ நீங்கள் (ஜெய்ராம் ரமேஷை குறிப்பிட்டு) புத்திசாலி, மிகவும் திறமையானவர்.

எதிர்க்கட்சி தலைவராக கார்கே செய்ய வேண்டிய வேலைகளை செய்கிறீர்கள். எனவே அவரது இருக்கையில் நீங்கள் வந்து அமருங்கள்’’ என்றார். இதனால் கடுப்பான கார்கே, ‘‘வர்ணா (சாதி) அமைப்பை கொண்டு வராதீர்கள். அதனால்தான் ரமேஷை நீங்கள் புத்திசாலி என்கிறீர்கள், நான் மந்தமாக இருக்கிறேன் என்கிறீர்கள். இந்த இருக்கையில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நாட்டு மக்களும்தான் காரணம்’’ என்றார். இதையடுத்து தன்கருக்கும் கார்கேவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்