தங்கச்சிமட மல்லிகை நாற்று

மல்லிகை என்றாலே மதுரை தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா, மதுரைக்கு மல்லிகையை கொடுக்கிறதே ராமநாத புரம் மாவட்டம் தங்கச்சிமடத்துல இருந்து தான். தங்கச்சிமடம் மல்லிகைப் பூவுக்கும் மல்லிகை நாற்றுக்கும் ரொம்ப பிரபலம். இங்கிருந்து வாங்கப்படுகிற நாற்றுகள்தான் தமிழகம் முழுவதும் தாய்ச்செடியாக இருக்கு. அதற்கு காரணம் அந்த ஊர் செடியோட தரம்தான். மண்ணுக்கு கீழ நல்ல நீரோட்டம் இருக்கிறதால செடியோட தரம் நல்லா இருக்கு. அதேபோல, நல்ல மண் வளமும், நோய் தாக்காத தாய்ச்செடியில ஒட்டு வைத்து நாற்று எடுக்கிறதாலையும் மல்லிகை நாற்று தரமும் நன்றாக இருக்கும். தங்கச்சி மடம் அதை சுற்றியுள்ள கிராமத்துல கிடைக்கிற நாற்றுகள்தான் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களுக்கும் போகுது. ஒரு நாற்று மூன்றில் இருந்து எட்டு ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது மல்லிகை சீசன் என்பதால் வியாபாரிகள் தங்கச்சிமடம் மல்லிகைப் பூவுக்கும் நாற்றுக்கும் முந்துகிறார்கள்

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை