தம்பியை அரிவாளால் வெட்டியவர் கைது

 

தர்மபுரி, மே 1: தர்மபுரி குமாரசாமிபேட்டை நடேசன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (48). விவசாயியான இவருக்கு, குப்பூரில் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் சொத்தை பாகப்பிரிவினை செய்ததில், அவரது அண்ணன் குணசேகரனுக்கும், ஆறுமுகத்திற்கும் தகராறு இருந்து வந்தது. இதனிடையே, ஆறுமுகம் நேற்று முன்தினம் காலை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்து ஆறுமுகத்திடம் தகராறு செய்துள்ளனர். அப்போது குணசேகரன் அரிவாளால் வெட்டியதில், ஆறுமுகம் தலையில் பலத்த காயமடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஆறுமுகத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்