தைப்பூச திருவிழாவில் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு அன்னதானம் செய்வதற்காக காய்கறி பொருட்களை வழங்கிய இஸ்லாமியர்!

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் நாளை நடைபெறும் வள்ளலார் தைப்பூச திருவிழாவில் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு அன்னதானம் செய்வதற்காக பத்து டன் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை இஸ்லாமியர் வழங்கினார்.

வடலூர் சத்திய ஞான சபையில் நாளை(வியாழக்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி சத்தி ஞான சபைக்கு காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காய்கறி கடை உரிமையாளரும், சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவருமான பக்கிரான் தலைமை தாங்கினார். பின்னர் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 10 டன் காய்கறிகள் மற்றும் 50 அரிசி மூட்டைகளை சத்திய ஞான சபைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் சரக்கு வாகனத்தில் அனுப்பி வைத்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், நகர செயலாளர் வள்ளி விலாஸ் சீனிவாசன், கௌரவ தலைவர் வி.பி.எஸ். கணேசன், தேவி முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ், நகர இணை செயலாளர் சரவணன் மற்றும் வெங்கட் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு