வடலூர் சத்திய ஞானசபையில் 153வது தைப்பூச விழா 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வடலூர்: வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 153வது ஆண்டு தைப்பூசவிழாவையொட்டி நேற்று காலை 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படுகின்ற வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 153வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடைபெற்றது.

இதை முன்னிட்டு நேற்று முன்தினம் தரும சாலை மற்றும் சத்தியஞான சபையில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ேஜாதி தரிசனம் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி நடந்தது. இன்று காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. மனிதன் இறைவனை காண மனதில் இருக்கும் எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விலக்கி கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை மற்றும் கலப்பு திரை என 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.

* 157வது ஆண்டாக எரியும் அணையா அடுப்பு
ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் மக்களின் பசியை போக்குவதற்காக 1867ம் ஆண்டில் சத்திய தரும சாலையை நிறுவிய வள்ளலார் கையால் மூட்டப்பட்டது தான் இங்கு உள்ள அணையா அடுப்பு ஆகும். அது மட்டுமின்றி சுனாமி, புயல், வெள்ளம், கொரோனா என எந்த பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு இங்கு உணவு வழங்கபட்டது. இங்கு மூன்று வேளையும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெருமை வாய்ந்த அணையா அடுப்பு 156வது ஆண்டு நிறைவு செய்து 157வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்