தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!

பாங்காக்: தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிப் சுற்றுலாவுக்காக 44 பேரை ஏற்றிக்கொண்டு அயுத்தாயாவுக்குச் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது, இந்த சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் 6 ஆசிரியர்களும் சென்றுள்ளனர். அந்த பஸ், கு கோட் நகரில் ஜீர் ரங்சித் என்ற பகுதியருகே பஹோன் யோதின் சாலையில் சென்றபோது நண்பகல் வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 25பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷினவத்ரா இரங்கல் தெரிவித்தார்.

Related posts

கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்