தேஸ்பூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பணியிடங்கள்

அசாம், தேஸ்பூர் ஒன்றிய பல்கலைக்கழகத்தில் நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Assistant : (Administration) 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ.35,400. வயது: 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்களில் அப்பர் டிவிசன் கிளார்க்காக 3 ஆண்டுகள் பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும். டைப்பிங், கம்யூட்டர் அப்ளிகேசன் மற்றும் கடிதங்கள் டிராப்ட் செய்வது ஆகிய பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Laboratory Assistant: (Dept.of Physics): 1 இடம் (ஒபிசி). வயது: 32க்குள். தகுதி: இயற்பியல் பாடத்தில் பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.25,500.
3. Junior Accountant: (Administration) 2 இடங்கள் (பொது). வயது; 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் 2 ஆண்டுகள் லோயர் டிவிசன் கிளார்க்காக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.25,500.
4. Upper Division Clerk: (Administration): 1 இடம் (பொது). வயது: 32க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் 2 ஆண்டுகள் லோயர் டிவிசன் கிளார்க்காக பணிபுரிந்திருக்க வேண்டும். ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. சம்பளம்: ரூ.25,500.
5. Lower Division Clerk (Admn.,): 6 இடங்கள் (பொது-5, ஒபிசி-1). வயது: 32க்குள் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
6. Multi Tasking Staff (Admn.,): 5 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி. சம்பளம்: ரூ.18,000.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்தவும்.

https://tezunt.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2024.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது