துணிநூல் மற்றும் ஆடை நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை ஊக்குவிக்கும் திட்டம்: அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை:தமிழ்நாடு அரசின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர் துறை, ஆகிய துறைகள் ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவத்திற்கான அமைப்புடன் இணைந்து, துணி நூல் மற்றும் ஆடை துறையில் பாலின சமத்துவம், மகளிருக்கான அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ‘முத்தரப்பு கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (14ம் தேதி) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

இந்த கூட்டமைப்பு, பெண்கள் அதிக அளவில் பணிபுரியும் துணி நூல் மற்றும் ஆடை துறையில் உள்ள தர அங்கீகாரம் கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், அரசு அமைப்புகள், சேவையகங்கள், தொழில் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஒன்றிணைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அனைத்து பங்காளர்களுடன் இணைந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்­த நி­கழ்ச்­சி­யில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சமூக நலன் மற்­றும் மக­ளிர் உரி­மை து­றை­ செய­லா­ளர் ஜெய முரளீ­த­ரன், சமூக நல ஆணை­யர் அமு­த­வல்லி, ஐக்கிய நாடுகளின் பாலின சமத்துவ அமைப்பின் இந்திய நாட்டின் பிரதிநிதி சூசன் பெர்கசன் மற்­றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்­டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு