மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளி திறக்கும் நாளான ஜூன் 10ம் தேதியே மாணவ-மாணவியர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-25ம் ஆண்டு கல்வியாண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புத்தகப்பை, காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, பூட்ஸ் மற்றும் காலுறைகள், சீருடைகள், வண்ணப்பென்சில்கள், வண்ணக்கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரண பெட்டிகள் மற்றும் புவியியல் வரைப்படம் ஆகிய நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அந்தவகையில் பள்ளி திறக்கப்படும் நாளான ஜூன் 10ம் தேதி மாணவ-மாணவியர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், மற்றும் புவியியல் வரைப்படம் ஆகிய நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, 70.67 லட்சம் மாணாக்கர்களுக்கு பாடப்புத்தகமும், 60.75 லட்சம் மாணாக்கர்களுக்கு நோட்டுப்புத்தகமும், 8.22 லட்சம் மாணாக்கர்களுக்கு புவியியல் வரைப்படமும் வழங்கப்பட உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

 

Related posts

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்..!!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!