பயங்கரவாத தாக்குதல், முறியடிக்கும் வகையில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையில் ஒத்திகை பயிற்சி: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: தேசிய பாதுகாப்பு படை சென்னையில் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, சென்னை காவல்துறை ஆணையரகத்தில் டேபிள் டாப் பயிற்சி என்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் என்எஸ்ஜி மற்றும் பிற துறைகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்தாய்வு குறித்து எடுத்துரைத்தார்.

இதில் உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் நிர்வாகம், பொதுத்துறை, மத்திய நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகராட்சி, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், சென்னை துறைமுக ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், கடலோர பாதுகாப்பு குழு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர போக்குவரத்து கழகம், ரயில்வே, சென்னை பெருநகர காவல், பொதுப்பணித்துறை மற்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் உள்பட 28 துறையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்