பாகிஸ்தானில் பயங்கரம் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடித்து 40 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அரசியல் கட்சி கூட்டத்தில் நடந்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி பலியாகினர்.ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பாஜார் பழங்குடி மாவட்டத்தின் கார் பகுதியில் ஜமியத் உலேமா இ இஸ்லாம் பசல் தொழிலாளர்கள் கட்சி கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், திடீரென கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக போலீசாரும் அவசரகால வீரர்களும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது