டென்னிஸ் உலக தரவரிசையில் ஸ்ரீராம், ஜீவன் முன்னேற்றம்

சென்னை: ஏடிபி இரட்டையர் பிரிவு டென்னிஸ் தர வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஸ்லோவாக்கியா குடியரசில் நடைபெற்ற பிராடிஸ்லாவா ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் என் ஸ்ரீராம் பாலாஜி(33), ஜெர்மனி வீரர்ஆந்த்ரே பெக்மன்(39) இணை நேற்று முன்தினம் சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் நேற்று வெளியான ஏடிபி ஆடவர் இரட்டையர் தர வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி 12 இடங்கள் முன்னேறியுள்ளார். அதன் மூலம் முதல்முறையாக 78வது இடத்தை பிடித்துள்ளார். அவருடன் விளையாடிய ஜெர்மனி வீரர் ஆந்த்ரே 973 இடங்கள் உயர்ந்து 401வது இடத்தை எட்டியுள்ளார். ஷாங்காய் ஓபன் இரட்டையர் பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய வீரர் போபண்ணா 2 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். ஸ்பெயினில் நடந்த மலாகா ஓபன் இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதி வரை முன்னேறியதால் மற்றொரு தமிழக வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் 2 இடங்கள் உயர்ந்து இப்போது 98வது இடத்தில் இருக்கிறார்.

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

ஆன்லைனில் ஊழல் புகார் விசாரணை அறிக்கை: அரசு துறைகள், வங்கிகளுக்கு சிவிசி அறிவுறுத்தல்

நிதிஷை நீக்கும் வரை முடி வெட்டமாட்டேன் என்ற சபதம் நிறைவேற்றம்; அயோத்தியில் மொட்டை போட்ட பீகார் மாநில துணை முதல்வர்