தென்காசியில் 250 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்கள் அதிரடி அகற்றம்

தென்காசி: ‘தனியார் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. அவ்வாறு ஓட்டுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தென்காசி மாவட்டத்தில் காவல் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அரசு அல்லாத வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அகற்றினர்.

கடந்த இரு நாட்களில் மட்டும் 127 வாகனங்களில் இதுபோன்று ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 123 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. இவற்றில் 103 வாகனங்கள் காவல்துறையினரின் அரசு அல்லாத சொந்த வாகனங்கள் ஆகும். 3 நாட்களில் ல் மொத்தம் 250 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு