தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபு மீறல் : காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி : மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் மரபும் வழக்கமான நடைமுறையும் மீறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “18-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை உறுப்பினராக அதிக முறை பணியாற்றியவரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவதே மரபு மற்றும் நடைமுறை ஆகும். எம்.பி.யாக 8 முறை தேர்வான கொடிக்குன்னில் சுரேஷ் அல்லது வீரேந்திரகுமார் தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். வீரேந்திரகுமார் அமைச்சரானதால் காங்கிரசைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Related posts

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது