வடகிழக்கு பருவமழை குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சீரமைப்பு: ஒன்றியக்குழு பெருந்தலைவர் நடவடிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சாலை மேலும் மோசமடைந்து. ஆங்காங்கே குண்டும், குழியுமான இடத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நடந்து கூட செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என இந்த மோசமான சாலையில் ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி ஆலோசனையின் படி, நந்தியம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஏற்பாட்டில் ரயில் நிலையம் செல்லும் சாலையை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகளை நேற்று மேற்கொண்டனர். வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் ஜல்லி, சிமெண்ட் கலவையுடன் தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது.

Related posts

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை