தொன்மையான 273 கோயில்களில் பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (15.06.2023) மாநில அளவிலான 60-வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை, வியாசர்பாடி, அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், அத்திப்பட்டு, அருள்மிகு கிருஷ்ணசுவாமி பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பூக்காரத் தெரு, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவையாறு, அருள்மிகு விஜய விடங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம், அருள்மிகு தான்தோன்றியம்மன் திருக்கோயில், தண்டலம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், வண்டியூர், அருள்மிகு வீரராகவ பெருமாள் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், வளவனூர், அருள்மிகு கோணம்மன் திருக்கோயில், திண்டிவனம், அருள்மிகு திரிபுரநாதேஸ்வரர் திருக்கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, அருள்மிகு அய்யனார் திருக்கோயில், சின்னசேலம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், வெளிப்பேட்டை, அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம், அருள்மிகு ஆயி அம்மன் திருக்கோயில், அவிநாசி, அருள்மிகு லெட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோயில், திருச்சி மாவட்டம், பொய்கைகுடி, அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில், வயமலைப்பாளையம், அருள்மிகு ஈட்டிராமர் திருக்கோயில், பெரம்பலூர் மாவட்டம், வரகூர், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், வேப்பந்தட்டை, அருள்மிகு விநாயகர் திருக்கோயில், தென்காசி மாவட்டம், பண்பொழி, அருள்மிகு பார்வதி அம்மன் திருக்கோயில், மேலகரம், அருள்மிகு முப்புடாத்தியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 273 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

இக்கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள் சந்திரசேகர பட்டர், அனந்தசயனபட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி முனைவர் தட்சிணாமூர்த்தி, கட்டமைப்பு வல்லுநர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை வல்லுநர்கள் சீ.வசந்தி, ராமமூர்த்தி தொல்லியல் துறை வடிவமைப்பாளர் டி.சத்தியமூர்த்தி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு