கோழிக்கோடு அருகே கோயில் விழாவில் மார்க்சிஸ்ட் செயலாளர் வெட்டிக்கொலை: சொந்த கட்சி நிர்வாகி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கொயிலாண்டி கோயில் திருவிழாவில் மார்க்சிஸ்ட் செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிபிஎம் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி பெருவட்டூர் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன்(62). கொயிலாண்டி பகுதி மார்க்சிஸ்ட் செயலாளராக இருந்தார். சத்யநாதனுக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அபிலாஷ்(30) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சத்யநாதன் சென்றார். கோயில் மைதானத்தில் இன்னிசை கச்சேரி நடந்து கொண்டிருந்த இடம் அருகே சத்யநாதன் நின்று கொண்டிருந்தார். அந்த இடத்துக்கு வந்த அபிலாஷ், சத்யநாதனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த சத்யநாதனை பொதுமக்கள் மீட்டு கொயிலாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சத்யநாதன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து கொயிலாண்டி பகுதியில் நேற்று மார்க்சிஸ்ட் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடைேயே தப்பி ஓடிய அபிலாஷ் கொயிலாண்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரும் மார்க்சிஸ்ட் கொயிலாண்டி பகுதி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை