பாலியல் புகார் விவகாரம்: சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி. இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமியை கண்டுபிடிக்க போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்நிலையில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை பிடித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீதான பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்