கோயில்களில் அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார். குறிப்பிட்ட காலக்கெடுவில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான பணிகளை முடிக்க முடியாததால், நியமன பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது.

அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறநிலையத் துறை தரப்புக்கு நீதிபதிக்ள் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர். தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ள அறநிலையத் துறை அதிகாரிகளை நீக்கக் கோரியும், தக்கார்கள் நியமனம் தொடர்பாக தகுதியை நிர்ணயித்து விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தக்கார்களுக்கு கல்வித் தகுதியை நிர்ணயித்து ஏன் விதிகளை வகுக்க கூடாது என்று அறநிலையத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்; நெடுந்தூர சிறப்பு ரயில்கள் கன்னியாகுமரிக்கு வருமா?: பயணிகள் எதிர்பார்ப்பு

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு