கோயில் சொத்துக்களை மீட்க கோரிய வழக்கு: அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தர ஐகோர்ட்கிளை உத்தரவு

மதுரை: கோயில் சொத்துக்களை மீட்க கோரிய வழக்கில் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தர ஐகோர்ட்கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரில் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள பலநூறு கோடி மதிப்பு கோயில் சொத்துகளை மீட்டு பாதுகாக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. திரு தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். கோயிலில் உண்டியல் வைத்து வசூல் செய்த வெளி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. வசூல் செய்வது யார்? அந்த கோயிலின் சிசிடிவி பதிவுகளை அளித்தது யார்? என்பது குறித்து விசாரணை செய்து அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தர ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு