தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஆவேசம் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் சிலைகள் அகற்றம்: வீடுகள் மீது தாக்குதலால் வெளியூர்களில் கட்சியினர் தஞ்சம்

திருமலை: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்கள் வெளியூர்களில் தஞ்சமடைந்து உள்ளனர். இதற்கிடையே ஒய்எஸ்ஆர் சிலைகள்அகற்றப்பட்டு, கல்வெட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் ஒய்எஸ்ஆர் கட்சியினர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் நேற்றும் பல இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஒய்எஸ்ஆர் காங். முன்னாள் அமைச்சர் கோடாலி நானி, முன்னாள் எம்.எல்.ஏ. வல்லபனேனி வம்சி ஆகியோர் வீடுகளை நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த முயன்றனர். முன்னாள் அமைச்சர் கோடாலி நானி வீட்டில் புகுந்த தெலுங்கு தேசம் கட்சியினர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னமான பேனை நொறுக்கி அதனை கயிற்றில் கட்டி தரையில் இழுத்து சென்றனர். இதேபோல் ராஜமுந்திரியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் பெயர் இருந்தை கல்வெட்டு அடித்து உடைக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் ஆந்திராவில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. அனந்தபுரம் கிருஷ்ண தேவராய பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். சிலையை அதிகாரிகள் அகற்றினர்.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்