எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தெலுங்குதேசம் ஆதரவை பெற காங்கிரஸ், பாஜக தீவிர முயற்சி!!

டெல்லி : ஆந்திராவில் 16 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ள தெலுங்குதேசம் ஆதரவை பெற காங்கிரஸ், பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. 543 தொகுதிகளை கொண்ட மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 234 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற சூழலில் பாஜக தனியாக 235 இடங்களிலும் காங்கிரஸ் மட்டும் 100 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் எந்த கட்சியும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாததால் இதர கட்சிகளின் உதவியை நாடுகின்றன.

உதாரணமாக நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான். ஆனாலும் என்டிஏ கூட்டணியை உடைத்துக் கொண்டு ஜேடியூ, தெலுங்கு தேசம் கட்சிகள் இண்டியா கூட்டணியில் சேர வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் மோடி திடீரென போன் செய்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

மறுபுறம், கர்நாடக நுணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் சந்திர நாயுடுவை தொடர்புகொண்டு பேசியுள்ளார். இண்டியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று சந்திரபாபு நாயுடுவுக்கு சிவக்குமார் உறுதி அளித்துள்ளார். தெலுங்கு தேசம் இண்டியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இண்டியா கூட்டணியை ஆதரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு