கட்டுக்கதைகளை கூறி தம்பட்டம் அடிக்கிறாங்க: பிரதமர் பயணம் குறித்து காங். விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டு, தம்பட்டம் அடிப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் நடக்கும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி குறித்த மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. உண்மை என்னவென்றால் 2003ம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அழைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதுபோன்ற ஜி7 மாநாட்டில் தவறாமல் கலந்து கொண்டுள்ளார் ’’ என்றார்.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே