ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

திருமலை:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அமராவதி உண்டவல்லியில் உள்ள இல்லத்திற்கு தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று காலை சென்றார். அவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் அமைச்சர் லோகேஷ் வீட்டு வாசலில் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து சென்றனர். சுமார் 2 மணி நேர கலந்துரையாடலுக்கு பிறகு விஜயவாடாவில் உள்ள கனகதுர்கை கோயிலுக்கு சென்று அம்மனை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தரிசித்தார்.

பிறகு ஆளுநர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ சந்திரபாபு நாயுடு வளர்ச்சி பணிகள் குறித்து நன்கு அறிந்தவர், அனுபவம் மிக்கவர். ஆந்திர மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார்.

Related posts

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய அரசு பஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்