தெலங்கானா மாற்றுத்திறனாளி விடுதியில் பரபரப்பு 8 வயது பார்வையற்ற சிறுமி பாலியல் பலாத்காரம்

*ஊழியர் போக்சோவில் கைது

திருமலை : அரசு பெண்கள் விடுதியில் 8வயது மாற்றுத்திறனாளியை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் போக்சோவில் ைகது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட் அரசு பார்வையற்ற பெண்கள் விடுதியில் விகாராபாத்தை சேர்ந்த 8 வயது பார்வையற்ற சிறுமி படித்து வந்தார். விடுதி ஊழியராக நரேஷ்(24) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விடுதியில் அனைவரும் தூங்கிகொண்டிருந்தனர்.

அப்போது 8வயது பார்வையற்ற சிறுமியை விடுதியில் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்று நரேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தம் கசிவு ஏற்பட்டதால் விடுதி ஊழியர்கள் உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விடுதிக்கு வந்த பெற்றோர் சிறுயிடம் விசாரித்தபோது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியதால் பெற்றோர்கள் மலக்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

காவல் நிலையத்திற்குச் சென்றபோது, சிறுமிக்கு கண் பார்வை இல்லை என்றும், அவர் சொல்வதை நம்ப முடியவில்லை என்றும், சிகிச்சைக்காக கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்படி போலீசார் கூறினர். இதனையடுத்து பெற்றோர் ரத்தப்போக்கு நிற்காததால் ஐதராபாத் நிலோபர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமியை பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

உடனே டாக்டர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிற்கு போலீசார் விடுதிக்கு சென்று சிறுமியை பலாத்காரம் செய்த விடுதியில் பணியாற்றிய நரேஷை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாலும் பொருட்படுத்தாத விடுதி ஊழியர்களையும், புகாரை பெற்றுக்கொள்ள அலைக்கழிப்பு செய்த மலக்பேட் போலீசாரை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.பார்வையற்ற 8வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு