தேஜஸ்வி யாதவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

புதுடெல்லி: கடந்த 2023ம் ஆண்டு பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், \\”குஜராத்தியர்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்களாக இருக்க முடியும். அவர்களின் மோசடி மன்னிக்கப்படும்\\” என்று கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கில் தேஜஸ்வி யாதவ் உச்சநீதிமன்றத்தில் குஜராத்தியர்களுக்கு எதிராக தான் கூறிய கருத்துக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தேஜஸ்வியாதவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது