வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தவறவிட்ட பர்ஸ்சை போலீசார் மீட்டு ஒப்படைப்பு

பூந்தமல்லி: வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் தவறவிட்ட பர்சை, போக்குவரத்து போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். போரூர் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் மவுண்ட் சாலையில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகலிவாக்கம் அருகே ஒரு காரில் இருந்து மற்றொரு காரில் ஏறிய வாலிபரின், பர்ஸ் கீழே விழுந்தது. அதை கவனிக்காமல் அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். இதனைக் கண்ட போக்குவரத்து போலீசார், பர்சை எடுத்து திறந்து பார்த்தனர். அதில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணம் செய்ததற்கான விமான டிக்கெட், கிரெடிட் கார்டுகள் இருந்தன.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணையில், போரூர் அன்னை வேளாங்கண்ணி நகரைச் சேர்ந்த ஹரிஷ் கண்ணன் என்பவரது பர்ஸ் என தெரியவந்தது. மேலும், ஜப்பான் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்தவர், வீட்டிற்கு செல்ல வாடகை காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, கார் டிரைவருடன் ஏற்பட்ட பிரச்னையில் வேறு கார் ஏற்பாடு செய்து போகும் வழியில் பர்சை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஹரிஷ் கண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து தவறவிட்ட பர்சை இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழங்கினார். அந்த பர்சில் 6 கிரேடி கார்டுகள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் இருந்தது. பர்சை பெற்றுக்கொண்ட ஹரிஷ் கண்ணன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

Related posts

ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு

பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து