போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

பூந்தமல்லி: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில், போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து, அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர்.

அதில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததால் அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர் ராமாபுரம், பெரியார் நகரை சேர்ந்த ரூபன் குமார்(25), என்பதும், போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, கல்லூரி மாணவர்களுக்கு வாகனத்தில் சுற்றியபடியே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 110 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்: முத்தரசன் பேச்சு