1983 போல் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும்: கவாஸ்கர் நம்பிக்கை

மும்பை: ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. 2019ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை பைனலில் விளையாடிய நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அகமதாபாத்தில் மோதவுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில், அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை சென்னையில் எதிர்கொள்ளவுள்ளது. சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமானது. ஆகையால், இங்கு ஆஸ்திரேலிய அணியை இந்தியாவால் சுலபமாக வீழ்த்திவிட முடியும் எனக் கருதப்படுகிறது. அதேபோல், இந்திய அணி கடைசி கட்டத்தில் குவாலிபையர் 1, குவாலிபையர் 2 ஆகிய அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

இதனால், இந்திய அணியின் அட்டவணை குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ஆஸ்திரேலியா போன்ற அணிகளை, கடைசி கட்டத்தில், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நேரத்தில் எதிர்கொள்வது சரியாக இருக்காது. பலமிக்க அணிகளை முன்கூட்டியே எதிர்கொள்வது நல்லது. பலமிக்க அணிகளை முன்பு எதிர்கொண்டு வெற்றிகள் கிடைக்கவில்லை என்றாலும், கடைசியில் பலமில்லா அணிகளுக்கு எதிராக வெற்றிகளை பெற்றுவிட முடியும்.

இந்திய அணியின் அட்டவணை கச்சிதமாக இருக்கிறது. முன்பே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடிவிட்டு, கடைசி கட்டத்தில் குவாலிபையர் 1, குவாலிபையர் 2 ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. ஆகையால், இந்திய அணி அரையிறுதி, பைனல் வரை செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படி பைனலுக்கு சென்றுவிட்டால், இம்முறை இந்திய அணிதான் கோப்பையை தட்டித்தூக்கும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், முதல் போட்டியில் பலமிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டோம். மழை காரணமாக ஆட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. அதில் வெற்றியைப் பெற்றோம். இந்த மன உறுதியால்தான் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட முடிந்தது. தற்போதும், இதேபோல் ஒரு அட்டவணைதான் இந்திய அணிக்கு இருக்கிறது என்றார்.

Related posts

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: சித்தராமையா இன்று அவசர ஆலோசனை

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை