கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணி ஒருங்கிணைக்க 9 பேர் குழு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை ஒருங்கிணைக்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா தலைவராகவும், கும்தா, தாம்பரம் காவல் ஆணையர், மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆணையர், மாநகர போக்குவரத்து கழகம் இயக்குநர், டிஎன்எஸ்டிசி இயக்குநர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இந்த குழுவினர், பிளாஸ்டிக் இல்லா மண்டலமாக மாற்றுவது, மாநகர பேருந்துகளின் தடையற்ற சேவைகளை உறுதி செய்தல், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, ஜிஎஸ்டி சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கார் மற்றும் ஆட்டோ நிறுத்தம் இடங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் பராமரித்தல், பாலம், நடைமேடை அமைப்பது போன்ற பரிந்துரைகளை அரசுக்கு அளித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது