அணி மாறியது ஜான் பாண்டியன் கட்சி

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜவில் இணைந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறி, பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து 2வது கட்சியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகியுள்ளது. அந்த கட்சி தற்போது பாஜ கூட்டணியில் இணைந்துள்ளது.

தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜான்பாண்டியன் கட்சி, பாஜ கூட்டணியில் போட்டியிடுகிறது. மேலும் ஜான் பாண்டியனை நேரில் சந்தித்த பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பிரதமர் மோடி பங்கேற்கும் ’என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பும் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ஜான் பாண்டியன் கலந்து கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து கட்சிகள் வெளியேறி வருவது அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாரிவேந்தரின் ஐஜேக கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி பாஜவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்